கான்பூர் காவல் நிலையத்தில் காணாமல்போன 1400 பெட்டி மது பாட்டில்கள்: எலிகளைக் காரணமாக சொன்ன போலீஸார் மீது வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரக் காவல் நிலையத்தில் மது பாட்டில்கள் அடங்கிய 1,400 பெட்டிகள் மாயமாகி உள்ளன. இவற்றை எலிகள் நாசம் செய்து விட்டதாகக் கூறிய இரண்டு போலீஸார் மீது வழக்குப் பதிவாகி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மது போன்ற பொருட்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, பாதுகாத்து வைக்கப்படுவது வழக்கம். இவை நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு உரியவர் அல்லது அரசுக் கருவூலங்களில் ஒப்படைக்கப்படுவது உண்டு.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்