
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோலி பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் பதவி விலகினார்.
இந்நிலையில் கர்நாடக சட்டப் பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அவையில் அந்தரங்க வீடியோ விவகாரத்தை கிளப்பினர். சித்தராமையா கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்து, ரமேஷ் ஜார்கிஹோலியை முதல்வர் எடியூரப்பா காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸார் தர்ணாவில் ஈடுபட்டதால் அவைநாள் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டது.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்