ராஜீவ் காந்தியை அவமதிக்காமல் தயான்சந்தை கவுரவித்திருக்கலாம்: கிரிக்கெட்டில் மோடி என்ன சாதித்தார்?- சிவசேனா கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவமதிக்காமல், மேஜர் தயான் சந்தை கவுரப்படுத்தியிருக்கலாம். மத்தியில் ஆளும் பாஜக அரசின் அரசியல் விளையாட்டு, பழிவாங்கும், அவமானப்படுத்தும் அரசியல் என்று சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்காக ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதின் பெயரை மாற்றி தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்திருந்தார்.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்