பாரா பாட்மிண்டனில் தங்கம் வென்றார் சுகந்த்

உகாண்டாவின் கம்பலா நகரில் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் கடைசி நாளான நேற்று, ஆடவருக்கான எஸ்எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுகந்த் கதம் சகநாட்டைச் சேர்ந்த நிலேஷ் பாலுவை எதிர்த்து விளையாடினார். இதில் சுகந்த் 21-16, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

எஸ்எல் 3 பிரிவு இறுதிச் சுற்றில் டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிரமோத் பகத், சகநாட்டின் மனோஜ் சர்காரை எதிர்கொண்டார். இதில் பிரமோத் 19-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்