'மூன்றே நாளில் அடுத்த தொடரா?' - மொயின் அலி குற்றச்சாட்டு | 'ஐபிஎல் என்றால்...' - மைக்கேல் கிளார்க் பதிலடி

அடிலெய்ட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியான கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஐபிஎல் தொடரை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடும் இந்த தொடர் நாளை தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஞாயிறு அன்று டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தது இங்கிலாந்து அணி. மிகவும் குறுகிய நாட்கள் இடைவெளியில் (72 மணி நேரத்தில்) அடுத்த தொடரில் அந்த அணி விளையாடுகிறது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்