33 ஓவர்கள், 235 ரன்கள்: அறிமுகப் போட்டியில் பாகிஸ்தான் பவுலர் மோசமான சாதனை

ராவல்பிண்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகவும் மோசமான சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் அறிமுக பவுலர் ஜாஹித் மொஹமத். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 33 ஓவர்கள் வீசி, 235 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார் அவர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் ஆகியுள்ளார் அவர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன. ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 657 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்