பிரேசில் தேசத்தின் அடையாளம் 1931ம் ஆண்டு கார்கோவடோ மலையில் நிறுவப்பட்டு தன் இரண்டு கைகளையும் விரித்து அருள் புரிந்துகொண்டிருக்கும் இயேசுவின் சிலை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் அந்த சிலையைவிட ஒரு சிறுவன் பிரேசிலின் அடையாளமாக மாறினான். வறுமையை போக்க, ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டும், வீட்டு வேலை செய்துகொண்டும், டீக்கடையில் வேலை செய்துகொண்டும் இருந்த அந்த சிறுவன் புகழ்மிக்க இயேசு சிலைக்கு சவாலாக, பிரேசில் தேசத்தின் அடையாளமாக உருவெடுத்தது ஒரு சகாப்தம்.
1950-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியிடம் பிரேசில் தோற்றது. பிரேசிலின் ஒரு மூலையில் இருக்கும் கடை ஒன்றில் ரேடியோ கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருந்த டான் டின்ஹோ சொந்த நாட்டின் தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுதார். அருகில் இருந்த அவரின் 9 வயது மகன், “கவலைப்படாதீர்கள் அப்பா... நான் பெரியவனானதும் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை வாங்கித் தருவேன்” என்று சத்தியம் செய்தான்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்