இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு என்பது வெறும் ஸ்விங் அளவிலேயே தேங்கிப் போயிருந்ததற்கு ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் நீண்ட காலம் அணியில் ஆடியதுதான் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் புதிய ஆக்ரோஷ கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'இனி வேகம், அதிவேகப்பந்து வீச்சுக்குத்தான் அதிக முக்கியத்துவம்' என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆண்டர்சன், பிராட் ஜோடி 1039 விக்கெட்டுகளைத் தங்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆகவே அவர்களின் பங்களிப்பை மட்டப்படுத்துவதோ, குறைத்துக் கூறுவதோ கூடாது. ஆண்டர்சன், பிராட் அளவுக்கு உடற்தகுதி உடைய கச்சித பவுலர்கள் இங்கிலாந்தில் உருவாக வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. அதிவேக பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் காயம் காரணமாக அணிக்குள் நுழைய முடியவில்லை. இப்படி இருக்கும் போது ஆல் அவுட் ஃபாஸ்ட் பவுலிங் என்ற பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணியின் முடிவு எவ்வளவு தூரம் லபிக்கும் என்பதும் கேள்வியே.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்