31 அணிகள் கலந்து கொள்ளும் ஆடவருக்கான ஹாக்கி சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி

சென்னை: ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு சார்பில் ஆடவருக்கான 14-வது ஹாக்கி சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 16-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 31 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, சத்தீஸ்கர் ஆகிய 3 அணிகள் உள்ளன. ‘பி’ பிரிவில் ஹரியானா, தெலங்கானா, இமாச்சல் பிரதேசம், மிசோரம் அணிகளும் ‘சி’ பிரிவில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

‘டி’ பிரிவில் கர்நாடகா, சண்டிகர், உத்தராகண்ட், திரிபுரா ஆகிய அணிகளும், ‘இ’ பிரிவில் ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம் அணிகளும், ‘எஃப்’ பிரிவில் உத்தரபிரதேசம், டெல்லி, கேரளா, ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிகளும், ‘ஜி’ பிரிவில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் மணிப்பூர், பெங்கால், பிஹார், அசாம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்