மும்பை: எங்கள் அணியின் முக்கிய நோக்கம் வெற்றியைத் தேடுவதுதான், அதை அடைய எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ரோஹித் சர்மா கூறியதாவது: “நாங்கள் ஐந்து டாஸ்களிலும் தோற்றோம். ஆனால் ஒரு போட்டியை கூட இழக்காமல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். எந்த ஒரு தொடரிலும் தோல்வியின்றி இறுதி வரை செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் நாங்கள் அதைச் சாதித்தோம். சாம்பியன் பட்டம் வென்ற பிறகுதான் அதன் தனித்துவத்தை உணர்ந்தோம். இதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். நாங்கள் முழு உறுதியுடனும் ஒருங்கிணைந்த அணியாகவும் விளையாடினோம். ஒவ்வொருவரும் தங்களுக்கான பங்கையும் பொறுப்புகளையும் தெளிவாகப் புரிந்து செயல்பட்டனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்