வாலிபாலில் எஸ்ஆர்எம் வெற்றி!

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதன் 3-வது நாளான நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆர்எம் அகாடமி 25-20, 21-25, 25-17 என்ற செட் கணக்கில் அண்ணா திருமயம் அணியை தோற்கடித்தது. எஸ்ஆர்எம் ஐஎஸ்டி 23-25, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கி அணியையும், 25-19, 23-25, 25-12 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு காவல்துறை அணியையும் வீழ்த்தின. சென்னை ஐசிஎஃப் 26-24, 25-23 என்ற செட் கணக்கில் தளபதி நற்பணி மன்றம் அணியையும் வீழ்த்தின.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்