லயோனல் மெஸ்ஸி டிசம்பரில் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்: கங்குலி உள்ளிட்ட பிரபலங்களுடன் கால்பந்து விளையாடுகிறார்

கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கிறார்.

லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப் படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் காத்திருப்பததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்