புச்சி பாபு தொடரில் ஹைதராபாத் சாம்பியன்

சென்னை: புச்சி பாபு கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடின. சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்த இந்த ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி முதல் இன்​னிங்​ஸில் 376 ரன்​களும், டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்​களும் எடுத்​தன.

23 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஹைதர​பாத் அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 70 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்​திருந்த போது ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​த​தாக அறிவிக்​கப்​பட்​டது. வருண் கவுட் 56, ராகுல் ராதேஷ் 31 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி சார்​பில் வித்​யுத், ஹெம்​சுதேஷன் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்