‘பாகிஸ்தானின் நவாஸ்தான் இப்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்’ - மைக் ஹெசன் கருத்து

துபாய்: பாகிஸ்தான் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ்தான் இப்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இந்த சூழலில் வியாழக்கிழமை அன்று மைக் ஹெசன், நவாஸை புகழ்ந்துள்ளார். அண்மையில் முடிந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை நவாஸ் கைப்பற்றி இருந்தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்