
லார்ட்ஸ்: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. மேத்யூ ப்ரீட்ஸ்கே 77 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார். எய்டன் மார்க் ரம் 49, ரியான் ரிக்கெல்டன் 35, கார்பின் போஷ் 32 ரன்கள் சேர்த்தனர். டெவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4, ஆதில் ரஷித் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்