யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 10-ம் நிலை வீர​ரான சகநாட்​டைச் சேர்ந்த லோரென்சோ முசெட்​டி​யுடன் மோதி​னார். இதில் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் எளி​தாக வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்