மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்று நேபாளம் அணி சாதனை

ஷார்ஜா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டி 20 கிரிக்​கெட் போடடி​யில் 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்​பற்றி சாதனை படைத்​தது.

ஷார்​ஜா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற 2-வது டி 20 ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஆசிப் ஷேக் 47 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும் சந்​திப் ஜோரா 39 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​களும் விளாசினர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் அகீல் ஹோசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்