நாக்பூர்: அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடிக்கச் சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரிஜி மகராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து நாக்பூரில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறியாவது: ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைய மூன்றரை ஆண்டுகள் ஆகும். கோயில் கட்டுமானத்துக்காக ரூ.1,100 கோடி செலவாகும். இதில் கோயிலின் மூலஸ்தான கட்டுமானப் பணிக்கு மட்டும் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி செலவாகும். இதற்காக நாடு முழுவதும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rBkd1f
0 கருத்துகள்