கர்நாடக மேலவை துணை தலைவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: அரசியல் கொலை என முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு https://ift.tt/3pD9Fgj

கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் மஜத கட்சியைச் சேர்ந்தவர் தர்மே கவுடா (65). கடந்த 2019-ல் காங்கிரஸ் ஆதரவோடு குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றதும் தர்மே கவுடாவுக்கு சட்ட மேலவைதுணைத் தலைவர் பதவி வழங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சக்கராயபட்டணா வில் உள்ள தன் இல்லத்தில் இருந்து கடூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு கிளம்பினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகளை தன்னுடன் வர வேண்டாம் என கூறிவிட்டு, தனியாக காரில் சென்றார். நள்ளிரவு ஆன பிறகும் வீட்டுக்கு திரும்பாததால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். இதையடுத்து, போலீஸாரின் உதவியுடன் அவரை தேடியபோது, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் கடூர் அருகேயுள்ள தண்டவாளத்தில் தர்மேகவுடா உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து, போலீஸார் தர்மேகவுடாவின் உடலை கைப்பற்றி ஷிமோகா மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2L2RqBN

கருத்துரையிடுக

0 கருத்துகள்