கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதி்க்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
இம்மாதம் 2-ம் தேதி கங்குலிக்கு முதல்முறையாக லேசான மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயரத்தக்குழுவாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அது ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினார்ர். இந்நிலையில் 2-வது முறையாக கங்குலிக்கு லேசான நெஞ்சு வலி கடந்த 27-ம் தேதி ஏற்பட்டது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்