வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி: வழித்தடங்கள், நிபந்தனைகளை அறிவித்தது காவல்துறை

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு வழித்தடங்களை போலீஸார் அறிவித்துள்ளனர். இந்த பேரணியில் 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் 60-வது நாளை எட்டியுள்ளது. விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இத
னால், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர்
பேரணி நடத்த விவசாய சங்கங்கள்திட்டமிட்டன. இந்த பேரணிக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இது சட்டம், ஒழுங்கு பிரச்சினை என்பதால் இதில் டெல்லி காவல்துறைதான் முடிவெடுக்க வேண்டும். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. பேரணி தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது’ என கூறியது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்