புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை டிஜிட்டல் பதிவாக மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று,"பொருளாதார ஆய்வறிக்கை எதற்காக தாக்கல்செய்யப்படுகிறது என்ற அடிப்படை தன்மையைக்கூட அது பூர்த்தி செய்யவில்லை. புரியாத விஷயத்தை அச்சிடாமல், மின்னணு பதிவாக மட்டும்பதிவேற்றியது மிகச் சிறந்த முடிவாகும். சரிவிலிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மோடி அரசு வகுத்துள்ள தொலைநோக்குக் கொள்கை மின்னணு பதிவாக இருப்பதே சிறந்த முடிவாகும்.
ஒரு காலத்தில் பொருளாதார ஆய்வறிக்கையானது மிகவும் எளிமையாகவும் வருங்காலம் குறித்த வழிகாட்டுதலையும் கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது பிற நலனுக்கானதாகவும், அந்த நலன் தெளிவில்லாததாகவும் உள்ளது. அரசு சுயமாக பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில் செயல்படுத்திய திட்டங்களை விளக்குவதாக இது உள்ளது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படை இலக்கான தொலைநோக்கு பார்வையைக் கொண்டதாக அது இல்லை" குறிப்பிட்டுள்ளார்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்