புதுடெல்லி: இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு சார்பில் 3 நாள் உயர்கல்வி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவியல் மற்றும் திறன் மேம்பாட்டில் தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒரே ஒழுங்காற்று அமைப்பு என்பது முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு என்பது வரை இந்தியாவில் உயர் கல்வியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கும் முறையை தேசிய கல்விக் கொள்கை மாற்றும். விரிவான ஆலோசனைக்குப் பிறகே இது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்