இந்திய தடகள உலகில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் எம்.சங்கர். சில நாட்களுக்கு முன் நடந்த நீளம் தாண்டும் போட்டியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரின் இந்த சாதனைக்கு, அவரது பெற்றோரும் ஒரு காரணம். சங்கரின் அப்பா முரளி, அம்மா பிஜிமோள் ஆகியோர் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பல தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கூறும் சங்கர், “சிறுவயது முதலே நான் விளையாட்டுகளின் மீது காதலோடு இருந்தேன். என் பெற்றோர் இருவரும் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருந்தது எனக்கு தூண்டுகோலாக இருந்தது. அத்துடன் என் உறவினர்கள் பலரும் தடகள உலகில் இருந்ததால், சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்” என்கிறார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்