15.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கல்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 15 கோடியே 65 லட்சத்து 26 ஆயிரத்து 140 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இவற்றில் 14 கோடியே 64 லட்சத்து 78 ஆயிரத்து 983 டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் வீணாணதும் அடங்கும். மக்களுக்கு செலுத்தப்பட்டது போக, மீதி 1 கோடியே 47 ஆயிரத்து 157 டோஸ் தடுப்பூசிகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளது. மேலும், 86 லட்சத்து 40 ஆயிரம் டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளன. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்