மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பீட் நகரில் உள்ள அம்பாஜோகோய் எனும் இடத்தில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே ஆம்புலன்ஸில் 22 கரோனா நோயாளிகளின் சடலங்களை ஏற்றிச் சென்ற அவல சம்பவம் நடந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் அமரர் ஊர்திக்கு பற்றாக்குறை உள்ளதால் ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் 22 உடல்கள் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பாக பீட் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சிவாஜி சுக்ரே கூறுகையில், ‘‘இங்கு கரோனா நோயாளிகளின் உயிரிழப்பு அதிகஅளவில் இருக்கிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின்போது 5 ஆம்புலன்ஸ்கள் இருந்தன.ஆனால், 3 ஆம்புலன்ஸ்களை அரசு திரும்பப் பெற்றுவிட்டது. ஒரு ஆம்புலன்ஸில் இறந்தவர்களின் உடல்களையும், மற்றொரு ஆம்புலன்ஸில் நோயாளிகளையும் அழைத்து வருகிறோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்களை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்று தகனம் செய்தனர். கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தருமாறு மாநில சுகாதாரத் துறையைக் கேட்டுள்ளோம்’’ என்றார். இதுதொடர்பாக பாஜக மேலவை உறுப்பினர் சுரேஷ் தாஸ் கூறுகையில், “பிரச்சினைக்கு தீர்வு சொல்ல மறுக்கின்றனர்” என்றார்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்