விளையாட்டாய் சில கதைகள்: ஒரே மாதத்தில் 1,000 ரன்களை அடித்த வீரர்

கிரிக்கெட் விளையாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டபிள்யூ.ஜி.கிரேஸ். கிரிக்கெட் ஆட்டங்களின் தொடக்க காலத்தில் டான் பிராட்மேனையும் விஞ்சிய வீரராக கருதப்பட்ட டபிள்யூ. ஜி.கிரேஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். 1895-ம் ஆண்டில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய சாதனையை கிரேஸ் படைத்துள்ளார். அந்த ஆண்டில் மே 9-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடந்த முதல்தரப் போட்டிகளில் வெறும் 10 இன்னிங்ஸ்களில் 1,016 ரன்களை குவித்ததே அந்த சாதனை. இந்த ஆயிரம் ரன்களில் 2 சதங்களும், 2 இரட்டைச் சதங்களும் அடங்கும். டபிள்யூ.ஜி.ஜிரேஸின் இந்தச் சாதனையை இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் முறியடிக்கவில்லை.

இங்கிலாந்தின் பிரிஸ்டால் நகரில் 1858-ம் ஆண்டில் பிறந்த இவர், 1880 முதல் 1899 வரை இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். அக்காலத்தில் பிரண்ட் ஃபுட் மற்றும் பேக் ஃபுட் என்று 2 வகையிலும் கால்களை நகர்த்தி பேட்டிங் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்தவராக கிரேஸ் இருந்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில், 54 ஆயிரம் ரன்களுக்கு மேல் இவர் குவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி, ஒரு டாக்டராகவும் இருந்துள்ளார். தான் பங்கேற்கும் போட்டிகளின்போது, எந்த வீரராவது காயம்பட்டால், அவரே சிகிச்சை அளிப்பார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்