கரோனா வைரஸ் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி யதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் சீனா இதை மறுத்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு மார்ச் மாதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தெரி வித்தன.
எனவே, கரோனா வைரஸின் தோற்றம், பரவல் குறித்து சர்வ தேச விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, ‘‘கரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்வதில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அதன் மூலம் மட்டுமே இந்தப் பேரழிவு குறித்து ஒரு முடிவுக்கு சர்வதேச நாடுகள் வரமுடியும்’ என்றார்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்