புகை பிடிப்போர் கரோனாவால் உயிரிழக்கும் அபாயம்

சர்வதேச புகையிலை எதிர்ப்புதினம் இன்று அனுசரிக்கப்படு கிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை:

புகைப் பிடிப்போர் புற்றுநோய், இதய நோய் உள்ளிட்டதீவிர நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் 50 சதவீதம் அதிகமாக உள்ளது. இதேபோல புகை பிடிப்போர் கரோனாவால் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகமாக உள்ளது. எனவே புகைப் பிடிக்கும் பழக்கத்தை இப்போதே கைவிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. எங்களது முயற்சிக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பிட்ட 23 நாடுகளில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்