கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் மேஜர் விபூதி சங்கர் தவுன்டியால் என்பவரும் ஒருவர். தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்தாலும், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த கணவனைப் போலவே அவரது மனைவி நிதிகா கவுலும் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற விரும்பினார்.
அதன்படி ராணுவத்திலும் சேர்ந்துவிட்டார். சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமியில் இதற்கான விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிதிகாவின் ராணுவ சீருடையில் லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி ராணுவ நட்சத்திர சின்னங்களை அணிவித்தார். நிதிகா ராணுவத்தில் சேர்ந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை, பாதுகாப்புத் துறையின் உதாம்பூர் பிரிவு பிஆர்ஓ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதைப் பார்த்த பலரும் நிதிகாவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்