2 மாதங்களில் ரூ.51 ஆயிரம் கோடி தங்கம் இறக்குமதி

இந்தியாவில் கடந்த ஏப்ரல்,மே மாதங்களில் தங்கம் இறக்குமதி பல மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த 2 மாதங்களில் மட்டும்ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் வெறும் ரூ.599 கோடி மதிப்பிலான தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு தங்கம்இறக்குமதி அதிகரித்ததால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறைவெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.73 ஆயிரம் கோடியாகஇருந்த வர்த்தகப் பற்றாக்குறை இந்த ஆண்டு ரூ.1.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. - பிடிஐ



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்