காஷ்மீர் பண்டிட் ஊழியர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்

தீவிரவாதத்தால் காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட் சமூகத்தினர் காஷ்மீரில் மீண்டும்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு பயிற்சிக்குப் பிறகு அரசுப் பணி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பண்டிட் ஊழியர்களுக்காக காஷ்மீரின் 5 மாவட்டங்களில் 2,744 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிலப் பரிமாற்றத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 2015-ம் ஆண்டு பிரதமர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.356 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இப்பணி அடுத்த 18 மாதங்களில் முடிவடையும்.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்