மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் தொடங்கியது. மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 6,97,164 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு முன்னதாக மம்தா பானர்ஜி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நான் எனது சொந்த ஊரில் இருந்து தேர்வாக வேண்டும் என்பது விதி போல. இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும். நான் முதல்வராக இருந்தால் மட்டுமே, பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராட முடியும். குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் என எல்லாவற்றையும் எதிர்க்க நான் முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்