பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆத்மராம் நத்கர்னி, "பட்டாசுஉற்பத்தி துறை மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பட்டாசு தடை, கட்டுப்பாடுகளால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது" என்றார்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்