காங்கிரஸால் பிரதமர் மோடி பலமாகிறார்; பாஜகவின்டிஆர்பி : மம்தா பானர்ஜி கடும் சாடல்

காங்கிரஸால் தான் பிரதமர் மோடி இன்னும் பலமாகப் போகிறார், ஏனென்றால் பாஜகவின் டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகள் ஏறுவதே காங்கிரஸால் தான் என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவா சட்டப் பேரவைக்கு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் சில இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போன காங்கிரஸ் கட்சி, இம்முறை தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம் அங்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்