தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமைக்ரான் வகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று இந்தியமருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆரின் தொற்று நோயியல், தொற்று நோய்கள் துறை தலைவர் சாமிரான்பான்டா கூறியதாவது: இந்த புதியவைரஸில் கண்டறியப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. இது ஆபத்தானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும் அவசியமும் இல்லை என்று தெரிகிறது. தற்போது வரை அத்தகைய செய்திகளோ, தரவுகளோ எதுவும் வரவில்லை. இந்த புதிய வகை வைரஸ் பாதிப்புகளின் வீரியம் தொடர்பான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைவரும் 2 டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்