டென்னிஸை விட்டே சென்றவர், மீண்டு வந்து வென்ற கதை - ஆஸ்திரேலியர்களின் நாயகி அஷ் பார்டி

மெல்போர்ன்: பெண்கள் டென்னிஸ் என்றாலே மார்கரட் கோர்ட் தொடங்கி செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, இவானோவிச், கிவிட்டோவா, ஹாலப் என்ற பெயர்கள் தான் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் என்ட்ரி கொடுத்தவர்தான் அஷ்லிக் பார்ட்டி. 2011-ல் விம்பிள்டன் ஜூனியர் பட்டம், 2021-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டம், இடையில் 2019-ல் பிரெஞ்ச் ஓபன், இதோ இப்போது ஆஸ்திரேலிய ஓபன் என்று டென்னிஸில் புதிய சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் இந்த உலகின் நம்பர் ஒன் வீராங்கனை.

ஆஸ்திரேலியர்களின் நீண்ட கால கனவு தங்கள் சொந்த நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை ஓர் ஆஸ்திரேலியர் வெல்ல வேண்டும் என்பதே. இதுவரை எந்த ஆஸ்திரேலியரும் இந்தக் கோப்பையை வெல்லாமல் இல்லை. 1978-ல் கிறிஸ் ஓ நெயில் வென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு 44 ஆண்டுகளாக எந்த ஓர் ஆஸ்திரேலிய வீராங்கனையும் அந்த சாதனையை புரியவில்லை. அந்த நீண்ட ஏக்கத்தை இன்று தீர்த்துவைத்துள்ளார் அஷ்லிக் பார்ட்டி. இதற்கான கோப்பை வழங்கப்பட்டபோது அஷ்லியிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. அந்தப் புகைப்படம் டென்னிஸ் உடனான அவரின் காதலை வெளிப்படுத்தியது. ஆறு வயதில் தனது முதல் டென்னிஸ் கோப்பையுடன் அஷ்லிக் போஸ் கொடுத்த புகைப்படம்தான் அது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்