2017-க்கு பிறகு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சேஸிங், போலண்ட் பார்க் மைதானத்தில் இந்தியா நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கு. இந்த கூற்று, தென் ஆப்பிரிக்க அணியின் தற்கால நிலைமையை எளிதாக விளக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, நிர்வாக நெருக்கடி, நட்சத்திர வீரர்களின் ஓய்வு மற்றும் இனவெறி குற்றச்சாட்டுகள் என அந்த அணி சந்திக்காத பிரச்சினைகளே இல்லை என்னும் அளவுக்கு நிலைமை.
போதாக்குறைக்கு ரபாடா, நோக்கியா என அணியின் முக்கிய வீரர்கள் இல்லை. டி காக், டேவிட் மில்லர் போன்றோர் எப்போது ஃபார்மில் இருப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இப்படிப்பட்ட அணியை எதிர்கொண்டது விராட் கோலி, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், அஸ்வின், பும்ரா, புவனேஸ்வர், ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் என சீனியர், ஜூனியர் நிறைந்த பலமிக்க இந்திய அணி. ஆனால், முழுபலத்துடன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தியா வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது. வரலாற்றில் இந்தியா சந்தித்த மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று என சீனியர் வீரர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் இந்த வரலாற்று தோல்விக்கு பின்னால் உள்ள பிரச்சினைகள் சொல்லிமாள முடியாதவையாக உள்ளன.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்