கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இந்தியாவின் ரவி பிஷ்னோய் அசத்தலாக பந்துவீசி எதிரணியை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான் ஆகியோர் அணியில் இருந்த நிலையில், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேலுக்கு மட்டும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்