'அவசரம்.. உடனே கிளம்பி வா' - சாரு சர்மாவின் ஐபிஎல் ஏல பின்னணி

பெங்களூரு: நேற்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் இலங்கை வீரர் வணிந்து ஹசரங்காவை ஏலம் அறிவித்தபோது மயங்கி கீழே விழுந்தார். அவருக்குப் பதிலாக, நேற்று ஏலத்தை நடத்தியவர் பிரபல விளையாட்டு வர்ணனையாளர் சாரு சர்மா.

ஹக் எட்மீட்ஸ் போலவே ஏலத்தை சுவாரஸ்யமாகவும், நேர்த்தியாகவும் கொண்டுச்சென்றார் சாரு. இதற்காக நெட்டிசன்கள் அவரை பாராட்டு மழையில் நனைத்துக் கொண்டிருக்கிறார்கள். சாரு திடீரென ஏல பொறுப்பை ஏற்றத்தின் பின்னணி சற்று சுவாரஸ்யமானது. பெங்களூருவில் வசிக்கும் சாருவின் வீடு ஐபிஎல் ஏலம் நடந்த ஐடிசி கார்டேனியா ஹோட்டலில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. ஹக் எட்மீட்ஸ் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு சாருவை போனில் அழைத்துள்ளார் ​​அவரது பழைய நண்பர் பிரிஜேஷ் படேல். பிரிஜேஷ் தான் தற்போது ஐபிஎல் நிர்வாக தலைவர். அவர் அழைத்தபோது, சாரு மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்