மும்பை: "இதுவே கல்லி கிரிக்கெட்டில் நடந்திருந்தால் நான்-ஸ்ட்ரைக்கர் தான் அவுட் என நாங்கள் அறிவிப்போம்" என சொல்லியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். விசித்திரமான முறையில் தனது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் அவுட்டான வீடியோவை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார் சச்சின்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் ஹெட்டிங்கிலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தற்போது இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. நியூசிலாந்து பேட் செய்த போது அந்த அணியின் வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் விசித்திரமான முறையில் அவுட்டாகி இருந்தார். அது இப்போது பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், அந்த வீடியோவை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்