அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூடிய விரைவில் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஆதரவாக அவர் பேசி உள்ளார்.
கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்