துபாய்: வரும் 2023 வாக்கில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை உறுதி செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இந்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது ஆண்டு ஓவல் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2023 இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். இதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள 9 டெஸ்ட் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு இந்தத் தொடர் நடத்தப்படும். ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் 3 தொடர்கள் சொந்த நாட்டிலும், 3 தொடர்கள் வெளிநாடுகளிலும் நடக்கும்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்