லுசைல்: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். அந்த கோலை ஸ்கோர் செய்ததும் மைதானத்தில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு முன்பாக உற்சாகத்தில் ஆர்ப்பரித்து எழுந்தார். இருந்தாலும் அது ஆட்டத்தின் பிற்பாதியில் நீடிக்கவில்லை. இந்த போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை தழுவியுள்ளது.
குரூப் ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் லுசைல் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மெஸ்ஸி கோல் பதிவு செய்து அசத்தினார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்