மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று தன் 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் டேவிட் வார்னர் இரட்டைச் சதமெடுத்து ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார். டெஸ்ட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட 10வது வீரர் என்ற பெருமையை எட்டினார் டேவிட் வார்னர். சுமார் 3 ஆண்டுகால சத வறட்சிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அவரது சதத்துக்கு தண்ணீர் பாய்ச்சியது, விளாசினார் இரட்டைச் சதத்தை.
சென்னையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஜோ ரூட் 218 ரன்களை தன் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த சாதனையை வார்னர் இரட்டைச் சதம் மூலம் 100வது டெஸ்ட் இரட்டைச் சதம் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். 196 ரன்களில் இருந்த போது இங்கிடி பந்து ஒன்று கூடுதலாக எழும்ப வார்னரின் கட் ஷாட் எட்ஜ் ஆகி ஒரே ஸ்லிப்புக்கு வைடாகச் சென்று பவுண்டரி சென்றது, 100வது டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார். மேலும் இந்த இரட்டைச் சதம் மூலம் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த 184 ரன்களையும் கடந்தார். வார்னரின் 3வது டெஸ்ட் இரட்டைச் சதம் ஆகும் இது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்