Indian Grand Prix 2 - 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அர்ச்சனா!

திருவனந்தபுரம்: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள தொடரில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன். இதில் 100 மீட்டர் பிரிவில் ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அவர் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 மீட்டர் ஓட்டத்தை 11.52 நொடிகளிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 23.21 நொடிகளிலும் அவர் கடந்துள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை காட்டிலும் 0.22 நொடிகள் முன்னிலையில் பந்தய தூரத்தை அர்ச்சனா கடந்துள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்