புலவாயோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 6 சுற்றில் நேற்று புலவாயோ நகரில் ஜிம்பாப்வே–ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 103 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில் அவர், அடித்த 3-வது சதமாக இது அமைந்தது.
சிகந்தர் ராசா 42, லூக் ஜாங்வி 43, கிரெய்க் எர்வின் 25, வெஸ்லி மாதவரே 25, ஜாய்லார்டு கும்பி 21 ரன்கள் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் பயாஸ் பட் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 333 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் அணி ஒரு கட்டத்தில் 46 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான காஷ்யப் பிரஜாபதி 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஜதிந்தர் சிங் 2, அகிப் இல்யாஸ் 45, ஜீஷான் மக்சூத் 23, அயன் கான் 47, ஷோயிப் கான் 11, நசீம் குஷி 12, கலீமுல்லா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்