புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யூஎஃப்ஐ) தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தான் பெற்ற கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை அரசிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாஜக எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தியதையடுத்து பிரிஜ் பூஷண் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்