கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - சாதிக்க காத்திருக்கும் தமிழக மகளிர் வாலிபால் அணி

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் வாலிபால் போட்டி 24-ம்தேதி (இன்று) முதல் 28-ம் தேதி வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 5 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியிலும் தமிழ்நாடு வாலிபால் மகளிர் அணி சிறந்த திறனை வெளிப்படுத்தி வந்துள்ளது.

ஒரு தங்கம், வெள்ளி பதக்கம் வென்றுள்ள தமிழ்நாடு அணி இரு முறை 4-வது இடம் பிடித்திருந்தது. ஒரே ஒரு முறை மட்டும் 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்திருந்தது. இம்முறை சொந்த மண் சாதகத்துடன் தங்கப் பதக்கம் வெல்வதில் தமிழ்நாடு வாலிபால் வீராங்கனைகள் அதீத முனைப்புடன் உள்ளனர். சிறப்பு பயிற்சி மேலாளரான 38 வருட அனுபவம் கொண்ட பி.செந்தூர் பாண்டியன் தமிழ்நாடு வீராங்கனைகளின் திறனை பட்டை தீட்டி வருகிறார். ஒவ்வொரு சர்வீஸிலும், அட்டாக்கிலும், பிளாக்கிலும், டிபன்ஸிலும் வீராங்கனைகள் மேற்கொள்ளும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களை, கூர்தீட்டி வருகிறார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்