ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 7-6(7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸை வீழ்த்தினார். இதன் மூலம் மேத்வதேவ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-1, 6-3, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்